நீலகிரி மாவட்டம் உதகை நகரில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இருந்து வரும் பேருந்துநிலையம் அதனை சுற்றியுள்ள நகரின் முக்கிய இடங்கள், சாலை சந்திப்புகள், கடைவீதிகள் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளது

குன்னூர் கோத்தகிரி ,கூடலூர் என அனைத்து பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள்,கடைகள் என அனைததும் மூடப்பட்டுள்ளது
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி திரிபவர்களை கண்காணிக்க ஆங்காங்கே முக்கிய சாலைகளில் தடுபபுகள் ஏற்படுத்தி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,

உதகை நகரின் முக்கிய பகுதியாக உள்ள கமர்சியல் சாலை,எட்டின் சாலை ,சேரிங்கிராஸ்
உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலைகளில் கண்காணிப்பு பணியி்ல் ஈடுபட்டுள்ள போலீசார் தேவையின்றி வெளியே நடமாடி வருபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்..
ஆள் நடமாட்டத்துடன் எப்பொழுதும் பரபரப்பாக காணப்பட்ட சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது

Be First to Comment