நூல் விலை உயர்வின் காரணமாக ஜவுளித் தொழில், பனியன் தொழில் ஆகியவை மிகக் கடுமையாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது. நூல் விலை கிலோவுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இறக்குமதிக்கான வரி உயர்வு மற்றும் பதுக்கல் ஆகியவையே இந்த செயற்கை தட்டுப்பாட்டிற்கும்,விலை உயர்வுக்கும் காரணம். நெசவு தொழிலை காப்பாற்றுவதற்கு நூல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
திமுக அரசாங்கம் இது குறித்து உருப்படியான நடவடிக்கைகள் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் பெரும்பாலான நெசவாளர்களும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் நூல் விலை உயர்வின் காரணமாக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள் தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுகிறேன் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
Be First to Comment