கோவை மாநகராட்சி சார்பில் இன்று நெகிழி பயன்பாடு உள்ள பகுதியாக கருதப்படும் ரயில் நிலையம் அருகே, கடைகளில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா தலைமையில் அதிகாரிகள் கடை கடையாக ஆய்வு செய்ததில், கிலோ கணக்கில் நெகிழிகள் பறிமுதல் செய்து ,மக்கும் தன்மை கொண்ட பைகளை பயன்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

ஆய்வில் மத்திய மண்டல தலைவர் – மீனாலோகு,சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வம், மாமன்ற உறுபினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Be First to Comment