இரண்டு நாட்கள் மீன், மற்றும் இறைச்சிகடைகள் செயல்படாது என்ற அறிவிப்பை தொடர்ந்து கோவையில் மீன், மற்றும் இறைச்சிக்கடைகளுக்கு படையெடுத்த மக்கள்.
நாடு முழுவதும் கொரானாவின் இரணடாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில் அரசு பல்வேறு நோய்தடுப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதனொருபகுதியாக இரவு ஊரடங்கு மற்றும் அனைத்து ஞாயற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மே 1, அரசு விடுமுறை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு என்பதாலும் இரண்டு நாட்கள் மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அரசு தடைவிதிதுள்ளது. அசைவ பிரியர்கள் இரண்டு நாட்கள் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகள் வாங்கி சேமித்துவைத்தனர். இதனால் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான மீன், மற்றும் இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக கோவை உக்கடம் பகுதியில் செயல்பட்டு வரும் சில்லறை விற்பனை மீன் அங்காடி மற்றும், கோவை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளில் இரவு 9 மணிவரை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஊரடங்கினால் மீன் விற்பனையை பொருத்தவரை கோவையில் ஒருநாளைக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
Be First to Comment