மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள டவ்தே புயல் காரணமாக கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.


இதன் காரணமாக கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை தொடர்ந்து வருகிறது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ள வனத்துறையினர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Be First to Comment