கோவை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித். சிவபிரகாஷ்,ரம்யா தம்பதியினரின் மகனான இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மை கராத்தே இண்டர்நேஷனல் சிலம்பம் பயிற்சி பள்ளியில் மாணவன் இந்திரஜித் சிறு வயது சின்னதம்பி என்ற பயிற்சியாளரிடம் சிலம்பம் கற்று வருகிறார்.
சிலம்பம் சுற்றுவதில், உலக சாதனை படைக்க விரும்பிய மாணவர் இந்திரஜித் 20 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டியபடியே சிலம்பம் சுற்றி நோபள் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். முன்னதாக காளப்பட்டியில் தனது சாதனை பயணத்தை துவக்கிய மாணவன் இந்திரஜித் விளாங்குறிச்சி,கோவில்பாளையம் பகுதியாக அன்னூர் வரை சுமார் 20 கிலோமீட்டர் சிலம்பத்தை சுற்றியபடி சைக்கிள் ஓட்டி சென்றார்.
இவரது சாதனை நிகழ்ச்சியை தீர்ப்பாளர் அரவிந்த் கண்காணித்து தேர்வு செய்தார். நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவன் இந்தரிஜித்திற்கு நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவன்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment