படுக்கை விபரங்கள் மக்களுக்கு தெரிந்திட ஏற்பாடு செய்திடுங்கள் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் ம.தி.மு.க இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ”கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மேற்க்கொள்ள தாங்கள் பொறுப்பேற்றுள்ளீர்கள் என்பதை அறிகிறேன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் ஆக்சிஜன் படுக்கை தேடி அலையும் நிலையும் அப்படி அலையும் போதே உயிர் பறிபோகும் நிலையும் தற்போது ஏற்ப்பட்டுள்ளது.
படுக்கை குறித்த விபரங்களை அறிய தமிழக அரசின் இணையத்தளம் உள்ளது.ஆனால் அதில் விபரங்கள் ஒவ்வொரு நாள் காலை 8.30 மணிக்கு மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகிறது.ஆனால் படுக்கை நிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மாறிக்கொண்டுள்ளது.அதனால் அந்த இணையத்தளத்தை பயன்படுத்தினாலும் அப்போதய விபரம் கிடைப்பதில்லை.
மேலும் அந்த இணையத்தளத்தில் உள்ள மருத்துவமனை அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டாலும் அதை எடுப்பதில்லை. அதனால் படுக்கை நிலை குறித்த விபரங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.
இப்படி ஒரு இணையத்தளம் உள்ளது என்பதை பத்திரிகை,தொலைகாட்சி ஊடகங்கள் வழியாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதில் உள்ள மருத்துவமனை அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் பதில் கிடைப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.
2) பேக்கரிகளும்,டீ கடைகளும் திறந்திருப்பதால் மக்கள் தேவையில்லாமல் டீ குடிக்க வருவதும் அங்கே கூட்டம் கூடுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதனால் உணவு விடுதிகளைத்தவிர டீகடை பேக்கரிகளை மூடவேண்டும்.
3) கடந்த முறை முழு அடைப்பில் இருந்த வாகனபோக்குவரத்து கட்டுப்பாடுகள் இந்த முறை இல்லாததால் அதிக வாகன போக்குவரத்து உள்ளது.இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது.இதை சரிசெய்யாவிட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் தெருவிலேயே செத்து விழும் அபாயம் ஏற்ப்பட்டு விடும்.
ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.

படுக்கை விபரங்கள் மக்களுக்கு தெரிந்திட ஏற்பாடு செய்யுங்கள். அமைச்சரிடம் ம.தி.மு.க ஈஸ்வரன் கோரிக்கை
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment