பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிளுக்கு மறுமூலதனம், உள்கட்டமைப்பு திட்டங்கள், கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டெண்கள் ‘கிடுகிடு’ என உயர்ந்தன.
பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு நேற்று வர்த்தகத்தின் இடையே 1,800 புள்ளிகள் உச்சம் தொட்டு 48,172.85 ஆக காணப்பட்டது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14,128 ஆக உயர்ந்தது.

இந்த பட்ஜெட்டில் வங்கி துறை சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக வங்களின் பங்குகள் உயர்ந்தன. இதற்கிடையில் இன்று கிட்டதட்ட 1200 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
சர்வதேச சந்தைகள் இரண்டாவது நாளாக ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியும் இந்திய சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகிறது. கூடுதலாக பட்ஜெட் அறிவிப்புகளும் சந்தையில் எதிரொலித்துள்ளது. இதனால் இந்திய சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக பலமான ஏற்றம் கண்டு வருகின்றது.
Be First to Comment