தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் சிலர் நோட்டீஸ்களை கொடுத்தனராம். அதில் ”எடப்பாடியிடமிருந்து காப்பற்றும் முன்னர் பொறுப்பாளரிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்ற துண்டறிக்கை விழாவின் பந்தலில் விநியோக்கிப்பட்டதாம்.”

மக்கள் பிரச்சனைகளை கேட்க வரும் தி.மு.க தலைவர் நிகழ்ச்சியில் தி.மு.கவினர் தங்கள் பிரச்சனைகளை நோட்டீஸாக வெளியிட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதாம்.
Be First to Comment