பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை உட்பட 10 அணைகள் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கட்டபட்டது. இதில் விவசாயத்தில் முக்கிய பங்குவகிக்கும் அணை ஆழியார் அணையாகும். மறைந்த முன்னால் முதல்வர் காமராஜர் அவர்களால் “1957கட்ட ஆரம்பித்து 1962” அணை திறக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை, வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால் வனப்பகுதி வழியாக ஆழியார் அணைக்கு நீர் வருகிறது.120″அடி கொண்ட அணையில் தற்போது 117″அடி வரை நிரம்பி உள்ளதால் எட்டு மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு அணையின் நீர் பயன்படுத்தபடுகிறது.

மேலும் அணையின் மறுபுறம் ஆழியார் பூங்காவும் உள்ளது. பரம்பிக்குளம் ஆழியார் பாசன தினத்தை முன்னிட்டு ஆழியார் அணை முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டு ஜொலிக்கிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் விதமாக உள்ளது எனவும், வால்பாறை செல்லும் வழியில் உள்ள 9″வது வளைவில் அணையின் காட்சியை பார்த்தால் பிரமிப்பாக உள்ளது எனவும், அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment