தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் தி.மு.க-வை நோக்கி செல்கின்றனர். குறிச்சி பகுதி தே.மு.தி.க முன்னாள் நகர தலைவர் கோல்டன் மோகன் தலைமையிலும், 98வது பாஜக தலைவர் செந்தில் தலைமையிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மேலும் வைரம் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உசேன் தலைமையில் குறிச்சி பிரபாகரன் முன்னிலையில் தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் உடன் தி.மு.க குறிச்சி தெற்கு பகுதி பொறுப்பாளர் இரா.கார்த்திகேயன், வட்டச் செயலாளர்கள் ஈச்சனாரி மகாலிங்கம், பி.முரளிதரன் மற்றும் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ச.புவனேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Be First to Comment