கோவை மாவட்டம் தெற்கு மண்டலம், குறிச்சி, காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு துவக்க பள்ளியின் மாணவர் சேர்க்கையை பற்றிய செய்தியை நமது குறிச்சி டைம்ஸில் பதிவு செய்திருந்தோம்.
அந்த செய்தியைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான vkp நந்தகுமார் இன்று அந்த பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தும் தன்னால் இயன்ற ஒரு சில பொருட்களை பள்ளிக்கு வழங்கினார்.
பள்ளிக்கு உதவிய அவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பியூலா மற்றும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.
Be First to Comment