Press "Enter" to skip to content

பாதிரியார் டேவிட்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இந்து முன்னணி மனு

கோவையில் மத கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கைது செய்யப்பட்ட பாதிரியார் டேவிட்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை தடாகம் ரோட்டில் உள்ள செயின்ட் பால்ஸ் கல்வி நிறுவனத்தின் தாளாளர் மற்றும் பாதிரியார் பொறுப்பில் இருந்து வரும் டேவிட் மத கலவரத்தை தூண்ட முயற்சித்ததாக நேற்று துடியலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்டம் சார்பில் கோவை கோட்ட செயலாளர் உருவை பாலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் செல்வம் மற்றும் தினேஷ், ராஜ்குமார், நவீன் உட்பட நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் விநாயகர் சதுர்த்தி அன்று ஜெப யாத்திரை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தியதாகவும் இந்த ஆண்டும் ஜெப யாத்திரை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டு கைதாகியுள்ள டேவிட் பாதிரியார் டேவிட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அவர் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளார். எனவே இந்து முன்னணி சார்பில் ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற மத மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதிரியார் டேவிட் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks