பாதத் தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால்தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். ஆனால், `அது நல்லதல்ல. முகத்துக்குக் காட்டும் அக்கறையில் சரிபாதியையாவது, பாதத்துக்கும் காட்ட வேண்டும். பாத வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்..!
பாத வெடிப்பு நீங்க – பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில், வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.

பாத வெடிப்பு மறைய (kuthikal vedippu neenga) கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.
இரவு நேரத்தில், தினமும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை உபயோகியுங்கள்.
பாத வெடிப்பு உள்ள இடத்தில் கடுகு எண்ணெய்யை ஊற்றி தேய்த்து மசாஜ் செய்து அதன் பின்பு பாதத்தை நீரால் கழுவினால் பாத வெடிப்பு நீங்கும்.
பச்சை மஞ்சள், மருதாணி, வேப்பிலை ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து பாத வெடிப்பு உள்ள தடவி வர பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் கற்றாளை சாற்றினை வெடிப்புகள் இருக்கும் இடத்தில் பாதத்தில் நன்றாக தேய்த்து பூசி விட்டு செல்லவேண்டும். பின்னர் காலையில் எழுந்து தண்ணீரில் கழுவினால் போதும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் குணமாகலாம்.
வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், மிகவும் லேசான தோல்களையுடைய, திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும்.
Be First to Comment