பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கரும்புக்கடை டிவிசன் சார்பாக கொரோனா பேரிடர் உதவி மையம் மதீனா நகர் கார்னரில் திறக்கப்பட்டது.
கோவையில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுமக்களின் தேவைகளை கருதி கொரோனா பேரிடர் மையத்தை (Covid Relief Centre) ஆங்காங்கே துவங்கியுள்ளது.

கரும்புக்கடை டிவிசன் சார்பாக உதவி மையத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கரும்புக்கடை டிவிசன் தலைவர் ஆசிக் இக்பால் முன்னிலையில் கோவை மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன், பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், NCHRO மாநில தகவல் தொடர்பு துறை முஹம்மத் நவ்ஃபல், பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன நல ஆலோசனைகள், மருத்துவமனை சம்பந்தபட்ட வழிகாட்டல், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து கொடுத்தல், ஆக்சிஜன் பல்ஸ் பரிசோதனை செய்தல், கபசுரக் குடிநீர், ஹோமியோபதி மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் வழங்குதல் போன்ற சேவைகள் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
Be First to Comment