கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது மருதமலை வனப்பகுதியில் 16 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் 14 யானைகள் ஐஓபி காலனி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தது இதனை அடுத்து வனத்துறையினர் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது. வளாகம் முழுவதும் சுற்றி வந்த யானை பல்கலைக்கழக வாயிலில் உள்ள காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு, மற்றும் அரிசியை எடுத்து சாப்பிட்டது. இது குறித்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த யானையை சத்தம் எழுப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Be First to Comment