பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வீட்டு கடன் தொடர்பான சலுகைகளை அறிவித்துள்ளது. வீட்டுகடன் தொடர்பாக கட்டுமான நிறுவனர்கள் தொடர்பான சந்திப்பு நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கட்டுமானம் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நீரஜ் குமார் பாண்டா செய்தியாளர்களிடம் பேசுகையில்,பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடன் திட்டத்தில்,பல்வேறுசிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும்,வீடுகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் கட்டுமானர்கள் இடையே நல்ல புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நிகழ்வு நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர்,கட்டுமான நிறுவனங்கள் வீட்டு கடன் பெற,விரைவான சேவையில்,குறைந்த வட்டி விகிதத்தில்,கடன் வழங்க எஸ்.பி.ஐ.வங்கி தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.மேலும் கட்டுமான துறையில் வேகமாக வளர்ந்து வரும் கோவை மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கி தரமான,விரைவான சேவை வழங்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். பேட்டியின் போது துணை பொது மேலாளர் திலீப் சிங் உடனிருந்தார்.

பாரத ஸ்டேட் வங்கி கட்டுமான நிறுவனர்களுடனான சந்திப்பு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment