பாரா ஒலிம்பிக் வீரர்களின் வெளிநாட்டு விளையாட்டிற்கான செலவுகளை, தமிழக அரசு ஏற்க வேண்டும் – தீபிகா ராமநாதன்!

அண்டை மாநிலங்களை போல் தமிழகத்தில் உள்ள பாரா ஒலிம்பிக் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று பங்கு பெறக்கூடிய விளையாட்டுகளுக்கான முழு செலவுகளையும், தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும் என சர்வதேச பாரா வால் சண்டை வீராங்கனை தீபிகா ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

75வது சுதந்திர தின விழாவில் யுனிவர்சல் ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் சார்பில் கோவை குரும்பபாளையம் பகுதியில் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் கலந்து கொண்டு சர்வதேச பாரா வால் சண்டை வீரர் தீபிகா ராமநாதன் மற்றும் சர்வதேச விளையாட்டு மாதிரி வெண்கல பதக்கம் வென்ற தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு சிங்கப்பெண் விருதுகளை வழங்கியும்,மாற்று திறனாளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச பாரா வால் சண்டை வீரர் தீபிகா ராமநாதன், சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தங்களுக்கு விருதுகளை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதுடன் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய பாரா ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளுக்கு வெளிநாடுகளில் சென்று பங்கு பெறக்கூடிய விளையாட்டுகளில் முழு செலவுகளையும், தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிகழ்ச்சியில் தற்காப்பு கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம், சுருள் உள்ளிட்டவை அரங்கேற்றப்பட்டது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *