பிச்சை எடுப்பது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். ஆனால், வறுமையின் காரணமாக சிலர் பிச்சை எடுத்து தங்கள் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.
நகரப்பகுதிகளிலும், பிரபல கோவில்கள் உள்ள இடங்களிலும் தான் பெரும்பாலும் இத்தகையை செயல்கள் நடைபெறுகிறது.
வறுமை இல்லத போதிலும், உழைக்க மறந்து சிலர் இதனை தொழிலாகவே செய்ய தொடங்கிவிட்டனர்.
இரக்க குணம் உள்ள மக்கள் உள்ள இடங்களை அறிந்து கும்பலாக புறப்பட்டு வரும் வடமாநில பெண்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிக்னல்களில் பிச்சை எடுத்து வருகின்றனர்.
கோவையில் இத்தகையை செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை வெயில், மழை, குளிர் என்று பாராமல் கையில் ஏந்தியவாறு போக்குவரத்து சிக்னல்களில் வளம் வருகிறது இந்த கும்பல்.
குழந்தையுடன் வந்து பிச்சை எடுப்பதால் மனம் இளகி, இங்குள்ள மக்கள் அவர்களுக்கு பணத்தை கொடுக்கின்றனர். ஆனால், அந்த கும்பலின் கையில் உள்ள குழந்தை படும் பாடு மிகவும் கொடுமையாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலத்தில் முகக்கவசம் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பச்சிளம் குழந்தையை பாடுபடுத்தும் இத்தகையை கும்பல் செய்யும் காரியங்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
Be First to Comment