பாரத பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவாக , தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கலை கலாச்சார பிரிவு சார்பாக சென்னை சேத்துப்பட்டு சின்மையா ஹரிடேஜ் ஆடிட்டோரியத்தில், மாநில தலைவர் காயத்திரி ரகுராம் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தேசிய செயலாளரும் தமிழக இணை பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி, மாநில (அமைப்பு) பொதுசெயலாளர் கேசவ் விநாயன் மற்றும் பல மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலை கலாச்சார பிரிவின் தலைவர் செல்வி காயத்ரி ரகுராம் இயக்கத்தில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு கொண்டு பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த 50நிமிட விளக்க கண்கவர் ஒளி ஒலி வெள்ளத்தில் நாட்டிய நடன நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலை கலாச்சார பிரிவின் மாநில செயலாளர் கோவையை சேர்ந்த சண்முகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், வினோத்குமார், சத்தியன், அழகன் தமிழ்மணி,பெப்சி சிவா,பேரரசு, தீனா, பாபுகணேஷ்.. கணேஷ்க்கர்,பரணி, ஆனந்த்,ஜெயஸ்ரீ, ரிஷி, சர்மா, ஜெயபிரகாஷ், ரத்தினம்,பிரபுதாஸ், சுராசுரேஷ், வெங்கடேஷ், சண்முகம், உமேஷ்பாபு,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment