25 கோடி மோசடி பிஷப் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.
கோவை, சி.எஸ்.ஐ., திருமண்டல கட்டுப்பாட்டிலுள்ள ஆலயங்களில் பணியாற்றும் பாதிரியார் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியில், 25 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, பாதிரியார் ஜெரோம் ஜேக்கப் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, பிஷப் திமோத்தி ரவீந்தர்,62, ஆலோசகர் டேவிட் மங்கள் தாஸ், 67, செல்வகுமார்,50, முன்னாள் செயலாளர் சார்லஸ் சாம்ராஜ்,43, ஆகியோர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.முன்ஜாமின் கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், நான்கு பேரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை, ஜூலை 9க்கு தள்ளிவைத்தார்.அதுவரை, நான்கு பேரையும் கைது செய்யகூடாது என்று, போலீசுக்கு உத்தரவிட்டார்.
Be First to Comment