அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை
ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது புகழேந்தி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, ”புரட்சித்தலைவி அம்மாவிற்கு ஜாமீன் வழங்கிய அஞ்சாநெஞ்சன் புகழேந்தி நீக்கத்திற்கு கண்டனம்..!”
அனாதை கட்சியா? அ.இ.அண்ணா திமுக, கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தி பேசுவதா, இதனை கண்டித்தால் கட்சியில் இருந்து நீக்குவதா, மானமிகு தொண்டர்களே இந்த தலைமை தேவையா.? கோவை கழக உண்மை விசுவாசிகள்.
இவ்வாறு இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment