தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விவையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 2.07 லட்சம் விண்ணப்பதாரர் தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு உணவு வழங்கல் துறை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு,ரேஷன் அட்டைகள் சென்னையில் உள்ள உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்கள், பிற மாவட்டங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிய ரேஷன் கார்டு பெறும் பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்கலாம் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புதிதாக வழங்கப்படும் ரேஷன் கார்டுகள் உணவுப் பொருள் வழங்கல் துறையின் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலம் ஆக்டிவேட் செய்த பின்னரே பயனாளிகள் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும், இல்லையெனில் ரேஷன் கடைகளுக்கு சென்று ரேஷன் கார்டை கொடுத்து, அதை கைரேகை பதிவு இயந்திரத்தில் காட்டும் போது அந்த கார்டு முடக்கப்பட்டுள்ளது என்றுதான் sms வரும் என உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Be First to Comment