கோவை மேட்டுபாளையத்தில் நாளை துவங்க உள்ள யானைகள் புத்துணர்வு முகாமிற்கு லாரியில் கிளம்பிய பேரூர் கோவில் கல்யாணி யானையை தி.மு.க பிரமுகர் ஒருவர் தடுத்தி நிறுத்தியதால் ஒரு மணி நேரம் தாமதமாக அனுப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவங்க உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து யானைகள் மேட்டுப்பாளையத்திற்கு வரவழைக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை பேரூர் கோவில் யானையான கல்யாணி இன்று காலை தயார் செய்யப்பட்டு காலை 5 மணியளவில் நல்ல நேரத்தில் செல்ல தயாரானது. அப்போது அங்கு வந்த திமுக பிரமுகர் ஞானவேல் மற்றும் அவரது மனைவி சுகந்தபிரியா திடீரென கல்யாணி யானையை அழைத்துச்சென்ற லாரியை மறித்து சாலையில் அமர்ந்தனர்.
கல்யாணி யானையின் பாகன் யானையை தொல்லை செய்வதால் அவரை மாற்றக்கோரி புகார் அளித்துள்ளதாவும், ஆனால் இப்போது வரை மாற்றாததால் அதனை கண்டித்து சாலையில் அமர்ந்து கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின் யானை தாமதமாக அனுப்பப்பட்டது.
Be First to Comment