உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு கோவை ஜெம் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜெம் மருத்துவமனையின் ‘டாக்டர் பழனிவேலு கேன்சர் சிறப்பு மையம்’ திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரசாமணி கலந்து கொண்டு புற்றுநோய் சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், “ஜெம் மருத்துவமனை தமிழக மருத்துவ துறைக்கும், கோவையின் பாரம்பரியத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தற்போது உலக அளவில் பெயர் சொல்லும் அளவுக்கு மருத்துவமனையாக உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். புற்றுநோயை நோயை குணப்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், மன ரீதியாக அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை என்பது எனது கணிப்பாக உள்ளது.
புற்றுநோயை குணப்படுத்த மருத்துவம் உள்ளது என்றாலும், தன்னிச்சையாக வந்து உடலை பரிசோதனை செய்துகொள்ளும் மனோபாவம் மக்களிடம் வரவில்லை. இந்த சூழலில், இந்த விதமான மையங்கள் காலத்தின் தேவையாக உள்ளது. வரும் காலத்தில் புற்று நோய் என்பது பயம் தராத, மன அழுத்தம் தரக்கூடாத ஒரு நோயாக இருக்கும்.”இவ்வாறு அவர் கூறினார்.
Be First to Comment