பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்கம், 3.இலட்சத்து 22 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த கைகடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
கோவை குணியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியை சேர்ந்த முபாரக் அலி, என்பவர் கடந்த 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வியாபார விசயமாக சென்ற நிலையில் அவரது மனைவி காலை 11 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இரவு வீட்டிற்கு வருவதற்கு தாமதமானதால் முபாரக் அலியும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மறுநாள் காலை 9.30 மணிக்கு கனவன், மனைவி இருவரும் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியில் உள்ள தங்களது வீட்டிற்கு வந்துள்ளார்கள்.
அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை பார்த்த முபாரக் அலி, அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்ததில் பிரோவில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகள்,வியாபாரத்திற்கு வைத்திருந்த 3 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

முபாரக் அலி, கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுனர்களின் உதவியுடன். தடயங்களை சேகரித்து நகை,பணம், கைடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மக்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதியில் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment