கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது.
கைவினைப்பொருட்கள் உலகில் தனித்து ஒரு இடத்தை பிடித்துள்ள பூம்புகார் என்ற விற்பனை நிலையம். அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருகின்றது.


இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்காட்சி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று முதல் வருகிற 15-ஆம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.
இது சம்பந்தமாக தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாளர் ரொனல்டு செல்வஸ்டின் கூறும்போது ”கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு விநாயகர்களை பித்தளை, பஞ்சலோகம், சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோகம், காகிதக்கூழ், களிமண், மார்பில் போன்ற வேலைப்பாடுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து விநாயகர் சிலைகளையும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது”என்றார்.

Be First to Comment