கோவை அருகே கே.என்.ஜி புதூர் அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணி புரிபவர் பிரபாகரன். இந்நிலையில் பெட்ரோல் பங்கிற்கு வந்த வாலிபர்கள் ரூபாய் 800 க்கு பெட்ரோல் போடும்படி கூறினார். இதையடுத்து அவர் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். இதனை கண்ட பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபரின் கையை பிடித்து தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அவர் நிலைதடுமாறி அருகிலிருந்த தடுப்பில் மோதினார். இதுகுறித்து புகாரின் பேரில் துடியலூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காமல் வாலிபர்கள் தப்பி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Be First to Comment