பெண்களும் அர்ச்சகர் ஆக்கபடுவார்கள் என்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் அர்ச்சகர் ஆக்க பட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய நிலைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை துறை அலுவலகத்தில் மண்டல ஆணையர்களுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளை வேகப்படுத்தி, துறையை புதுப்பொலிவுடன் மாற்ற ஆலோசனை நடத்தினோம் .
தி.மு.க பதவி ஏற்ற நாளில் இருந்து, வெளிப்படைதன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழில் சில இடங்களில் அர்ச்சனை செய்யப்படுகிறது. முக்கிய கோவில்கள் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்கிற பதாகை வைக்கப்படும். அதில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் விபரம் இடம்பெறும்.
100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்கிற திட்டம் செயல்படுத்தப்படும்
பெண்களையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டம் உள்ளது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் அர்ச்சகர் ஆக்க பட நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் நியமிக்கப்படுவார்கள்.
ஜீயர்கள் நியமிக்கிற முறை, கண்டிப்பாக இதற்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட நடைமுறையில் தேர்வு செய்யப்படும்.
இந்து சமய அறநிலைய துறை கீழ் உள்ள கோயில்களில் 30 யானைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க மருத்துவர்கள் அடங்கிய இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Be First to Comment