மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை பாஸ்போர்ட் சேவை மையத்தில் பெண் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சித்ரா பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில், அம்மையத்தில் பெண்கள் மட்டுமே இன்று ஒருநாள் பணியாற்றுகின்றனர். அம்மையத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பெண் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆவணங்களை சரிபார்த்தல், பாஸ்போர்ட்க்கு புகைப்படங்களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
Be First to Comment