பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் மர்ம நபர்களால் 5 மாத பெண் குழந்தை கடத்திய வழக்கில் மூவர் கைது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு மர்ம நபர்கள் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைத்து பொள்ளாச்சி மற்றும் கேரளா பகுதிகளிலும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதை அடுத்து ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது அடிப்படையில் சேத்துமடை அண்ணாநகரைச் சேர்ந்த முருகேசன் என்பவனை பிடித்து விசாரணை செய்ததில் ராமர் அங்கலக்குறிச்சி சேர்ந்த நபர் முத்துப்பாண்டி என்ற நபருக்கு குழந்தையை ரூபாய் 90,000_விற்றதாகவும் முத்துப்பாண்டி திருமணமாகி 23 வருடம் குழந்தை இல்லாததால் ராமரிடம் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கூறியதாகவும் ராமர் முருகேசன் இருவரும் சேர்ந்து குழந்தையை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
ஆனைமலை போலீசார் ராமர், முருகேசன், முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் கைது செய்து பொள்ளாச்சி ஜெ.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குழந்தை கடத்தல் வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Be First to Comment