கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், மற்றும் கேர் டி சர்விஸ் டு எர்த் சார்பில் பெண் பணியாளர்கள் நலன் மற்றும் மேம்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, கலந்து கொண்டு ஏற்புரை வழங்கினார். இதில் பேசிய அவர், இந்த தமிழ்நாடு மகளிர் ஆணையம் குறித்தும், பெண்கள் எவ்வாறு ஆணையத்தை தொடர்பு கொள்வது போன்றவற்றையும் விளக்கினார்.

மேலும் இதில் கலந்து கொண்டு உரையாற்றிய, கோவை கேர் டி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோத்திராஜ், கோவை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் தங்கமணி, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன் உட்பட பலர், பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்து கொள்ளுதல், புகார் தெரிவித்தல், மகளிர் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
இதில் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இக்கருத்துக்களையும் தகவல்களையும் கேட்டறிந்தனர்.
Be First to Comment