பெரியார் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது என்பதை தெளிவுப்படுத்தும் வரலாற்று சான்று கோவை, பீளமேடு, சர்வஜனா பள்ளியில், 97 ஆண்டுகளாக பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
1924ம் ஆண்டு கோவையில் முதல் தமிழ் வழிக்கல்வி முறையில் சர்வஜனா பள்ளி துவங்கப்பட்டது. 1925 டிசம்பர் 16ல் அப்போதைய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பெரியார், இப்பள்ளிக்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளார்.
பின்னர், விருந்தினர் பதிவேட்டில், பெரியார்., தன் கைப்பட எழுதியுள்ள குறிப்பில், கடவுள், இப்பள்ளிக்கூடத்திற்கும், மேன்மேலும் அபிவிருத்திக்கு அருள்புரியவும், பீளமேடு பி.எஸ்.ஜி., சன்ஸ் குடும்பத்தாருக்கு ஆயுள் விருத்தியும், ஐஸ்வர்யமும் கொடுக்க பிராத்திக்கிறேன் என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம், ஆரம்ப காலத்தில் பெரியாருக்கு தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டு இருந்தார் என்பது தெளிவாகியுள்ளது.

Be First to Comment