திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர் கிராமத்தில் 95 அடி உயர பெரியார் திருவுருவச் சிலை நிறுவுவதற்கான ஆணை பிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக தளங்களில் வெளியாகியிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்து மக்கள் கட்சி – தமிழகம் தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், ”கன்யாகுமரியில் (தனியார் இடத்தில்) ஆஞ்சநேயருக்கும், கோவையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தடை, ஆனால் தற்போது பெரியாருக்கு 95 அடியில் சிலை வைப்பதா? தமிழக அரசே, இது நியாம்தானா? இது மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக தளங்களில் ”சிலையை வழிபடாதே என்று சொன்ன பெரியார் தான் தனக்கு சிலை வைத்து தானே மாலை போட்டதெல்லாம், இது தான் திராவிட சித்தாந்தம். அவர்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளிச்சட்னியா என்று இந்த கருத்துக்கு பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும், பிற சிலைகள் எல்லாம் சாதி வெறியை தூண்டுகிறது, மடமைத்தனம் என்றும் பேசும் திராவிடவாளர்கள் பெரியாரின் சிலைக்கு சமத்துவ முத்திரை குத்துவதெப்படி? இதில் என்ன பகுத்தறிவு உள்ளது? மக்கள் வாழ்வியலால் வரலாம், சமூக சமநிலையினால் வரலாம், ஒரு சிலையினால் எப்படி சமத்துவம் வரும்? என்று தொடர்ந்து பல தரப்பிலும் கேள்வி முன்வைக்கப்படுகின்றன.
Be First to Comment