Press "Enter" to skip to content

பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல்ஹாசன் ட்விட்

பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு 2 ஆண்டுகளாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தராமல் உள்ளார். இதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் பேரறிவாளனின் பரோலை 1 வாரம் நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று.
இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என தெரிவித்துள்ளார்.

More from தமிழகம்More posts in தமிழகம் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks