தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவிலே இலவச கொரோனா தடுப்பூசி முகாமானது நடத்தப்பட்டது.


இதனை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூராதீனம் PASSRA அறக்கட்டளை, நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பூலுவபட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அமைப்பினர் இணைந்து நடத்தினர். இதில் 120 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment