பொள்ளாச்சி அருகே ஆனைமலை அங்கலக்குறிச்சியில் டூவீலர் சுமார் 50 அடிக்குமேல் காற்றில் பறந்து சென்று மரத்தின் மேல் மோதிய விபத்தில், இரு இளைஞர்கள் பலி பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு.

பொள்ளாச்சியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் குணா இருவரும் நண்பர்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால், கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் அணையை சுற்றிப்பார்க்க சென்று விற்று நேற்று மதியம் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கலக்குறிச்சி தனியார் கல்லூரி அருகே அதிவேகமாக முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்லும் பொழுது, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில், அதிவேகமாக சுமார் 50 அடிக்கு மேல் காற்றில் பறந்தபடி மரத்தில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி பதிவாகியுள்ளது,தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment