மறைந்த முன்னால் முதல்வர் காமராஜ் அவர்கள் கட்டிய அணைகளில், மிகவும் பிரபலமான அணை பரம்பிக்குளம் அணையாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடமான சோலையார் அணையின் உபரிநீர் சேடல்டேம் வழியாக தூணகடவு சென்று, பரம்பிக்குளம் அணையை வந்துசேருகிறது. 71கனஅடி கொண்ட பரம்பிக்குளம் அணை, உபரிநீர் வெளியேற்றம் செய்யும்பொழுது கேரளா – சாலக்குடி சென்று கடலில் கலக்கிறது. நேற்று இரவு10 மணி அளவில் அணையில் உள்ள மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் கழன்று விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

பொதுபணிதுறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில், பாலக்காடு ஜில்லா மாவட்ட கலெக்டர் முனராய் ஜோஷி மற்றும் தமிழக, கேரளா பொது பணித்துறை அதிகாரிகள் தற்பொழுது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கட்டுபடுத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அணையின் நீரால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment