தோட்டத்தில் இருந்த நாயை அடித்துக் கொன்று உள்ளது – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையிடம் விவசாயிகள் கோரிக்கை.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புளியங்கண்டி மலை அடிவாரப் பகுதியாகும் – கடந்த சில மாதங்கள் முன்பு ஒரக்காளியூர் தனியார் தோட்டத்தில் இருந்த 13 ஆடுகளை சிறுத்தை அடித்துகொன்றது. இதையடுத்து சில தினங்களில் புளியங்கண்டி ராசு கவுண்டர் தோட்டத்திலிருந்து வளர்ப்பு நாயை அடித்து கொன்றது. இச்சம்பவத்துக்கு பிறகு வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வனப்பகுதியைவிட்டு வெளியே வந்த சிறுத்தை ராசு கவுண்டர் தோட்டத்திலிருந்த மற்றொரு வளர்ப்பு நாயை அடித்து கொன்றுள்ளது. மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளை பராமரிப்பது சிரமமாக உள்ளது எனவும்
மேலும் வனத்துறையினர் சிறுத்தைக்கு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Be First to Comment