கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கவியருவியில் (குரங்கு அருவி) குளிப்பதற்காக உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கவியருவியில் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர்.
மாலை 4 மணி அளவில் அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடனடியாக வனத்துறை மற்றும் ஆழியார் காவல் நிலைய போலீசார் மூலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பு நலன் கருதி அருவி பகுதியிலிருந்து வெளியேற்றினர்.
இதனால் சில சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Be First to Comment