பொள்ளாச்சி அருகே உள்ள வக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க.நெசவாளர் அணி பிரிவு பதவியில் இருக்கும் ஆறுமுகம் தனது தாய் பத்மாவதி, தந்தை மணி ஆகியோர் பாப்பாம்மாளிடம் சென்று மூன்று லட்சம் வீட்டின் பத்திரம் வைத்து பணம் வாங்கி உள்ளனர். பலமுறை பாப்பாம்மள் ஆறுமுகத்திடம் பணம் கேட்டு தரவில்லை, பாப்பாம்மள் மகள் தற்போது புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பாப்பம்மாள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது பணத்தை மீட்டு தருமாறு பாப்பம்மாள் அழுதபடி வந்தார்.ஊழியர்கள் ஆறுதல் கூறி மனு எழுதி சார் ஆட்சியர் பிரியங்காவிடம் பாப்பம்மாள் மனு அளித்தார். மூதாட்டியிடம் மூன்று லட்சம் தி.மு.க.பிரமுகர் பறித்த சம்பவம் குறித்து மூதாட்டி பாப்பம்மாள் அளித்த மனுவில் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment