சென்னையில் தமிழக முதலமைச்சர் குற்றப்புலனாய்வு, மதுவிலக்கு அமலாக்கத் துறையுடன் இணைந்து, அமலாக்கத் துறை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட முதலமைச்சர், நாட்டு நலப்பணி தேசிய மாணவர் படையினர் பங்கேற்கும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 30லட்சம் மாணவர்களுடன் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவையில் இந்துஸ்தான் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
Be First to Comment