கோவையில் இறப்பிலும் இணைபிரியாத அன்பு தம்பதியினர். நெகிழ்ச்சி அடைய வைத்த சம்பவம்.
கோவை போத்தனூர் நீயூடவுன் இஸ்மாயில் வீதியை சேர்ந்தவர் அய்யாசாமி வயது 82. இவரது மனைவி மரகதம் வயது 77. இவர்களுக்கு திருமணம் ஆகி 52 வருடங்கள் கடந்துள்ளது. இத்தம்பதியினருக்கு 5 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து நிம்மதியான வாழ்வை அமைத்து கொடுத்த அய்யாசாமி மரகதம் தம்பதியினர் பால் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அய்யாசாமி வீட்டில் இருந்த போது காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. இதனால் மிகவும் சோகத்தில் மனைவி மரகதம் இருந்து வந்த நிலையில் திடீரென அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துள்ளது.
52 வருட வாழ்க்கையை இணைபிரியாமல் சேர்ந்து வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அந்த வாழ்வை முடிக்கும் தருவாயிலும் இணைபிரியாமல் விண்ணுலகம் சென்ற இந்த தம்பதியினரின் இறப்பை பார்த்து அப்பகுதியினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்விருவரின் உடலுக்கு அப்பகுயிதினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Be First to Comment