குறிச்சி போத்தனூர் ஸ்ரீராம் நகரில் மேட்டு தோட்டம் பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் பழனி மலை சரோமணி தம்பதிகள்.
அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் இட வசதி இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பழனி மலை சரோமணி ஆகியோர் தாங்களாக முன்வந்து தங்களுடைய சொந்த நிலமான 1.5 சென்ட் நிலத்தினை சாலை விரிவாக்க பணிக்காக தானமாக கொடுத்தனர்.

பழனி மலை சரோமணி தம்பதியினர் தானசெட்டில்மென்ட்பேப்பரில் அந்த பகுதியின் அ.தி.மு.க டிவிசன் செயலாளர் ரபீக் மற்றும் பகுதி பொதுமக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டு கொடுத்தனர்.


அந்த தம்பதியினருக்கு பாராட்டு மழை குவிகின்றது. இன்னும் இது போன்ற நல்ல உள்ளங்கள் வாழ்கிறார்கள் நம் சமூகத்தில் என்பதில் நமக்கு பெருமைதான்.
Be First to Comment