போத்தனூர் பகுதியை சேர்ந்த 8 மாத பெண் குழந்தை எஸ்.எம்.ஏ என்ற மிகவும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த நிலையில் நோயை குணப்படுத்த ரூ.18 கோடி மதிப்பில் ஊசி போட வேண்டும் என்பதால் குழந்தையை காப்பாற்ற பெற்றோர் போராடி வந்தனர்.
மலைக்க வைக்கும் தொகைதான். ஆனாலும், அப்துல்லா, ஆயிஷா தம்பதி மனம் தளரவில்லை. டெல்லி சென்றனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம், மத்திய நிதி அமைச்சர் அலுவலகம் என்று அனைத்து இடங்களிலும் மனு கொடுத்தனர். தன்னார்வலர்கள் உதவியுடன் இரண்டு மாதங்கள் ஸூஹாவுடன் டெல்லியில் தங்கியிருந்து தொடர்ந்து பெரும் முயற்சி எடுத்து வந்தனர்.
அவர்கள் பதிவு செய்து வைத்திருந்த தன்னார்வ அமைப்பினர் மூலம், ஸூஹாவுக்கு அந்த ஊசி கிடைத்துவிட்டது.

டெல்லியில் ஸூஹாவுக்கு இன்று வெற்றிகரமாக ஊசியும் போடப்பட்டுவிட்டது.
சாதாரண நிலையில் இருந்து ஸூஹா-வை காப்பாற்ற அப்துல்லா, ஆயிஷா எடுத்த கடும் முயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. அந்த குழந்தைக்காக உதவிய அனைவருக்கும் குறிச்சி டைம்ஸ் சார்பில் நன்றி.
இந்த பயணத்தில் குறிச்சி டைம்ஸும் சிறிது பங்காற்றி இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.
நலத்துடன் நீடூழி வாழ்க ஸூஹா!

Be First to Comment