கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை கலெக்டர் சமீரன் மற்றும் மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தை கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்களப்பணியாளர்களான காவல் துறையினர், அரசு ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கோவை மாநகர போலீசாருக்கு அவிநாசி சாலையில் உள்ள காவலர்கள் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தொடர்ந்து புறநகரில் பணியாற்றும் போலீசாருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை கலெக்டர் சமீரன் மற்றும் மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Be First to Comment