கோவை ஈச்சனாரி அருகே விசாரணைக்காக குற்றவாளியுடன் போலீசார் வந்த ஆம்னி வேன் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து.
சங்ககிரி மாவட்டம் மைலம்பட்டி பகுதியில் மோசடி செய்த வேலுச்சாமி என்பவரை தேவூர் போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக வேலுச்சாமியை நேற்று கோவை அழைத்து வந்த தேவூர் போலீசார் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஆம்னி காரில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தேவூர் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது கோவை ஈச்சனாரி சந்திப்பு அருகே கார் வந்தபோது பின்னால் வந்த ஈச்சர் மினி லாரி கார் மீது மோதியது இதில் வேலுச்சாமி கார் ஓட்டுனர் செல்லபதி மற்றும் காவலர்கள் கார்த்திக், விஜயன் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் மீட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மினி லாரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Be First to Comment