தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில், இயக்குநரும் பிரபல விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்,படங்கள் வெளியாகும்போது உடனடியாக விமர்சனங்களை கொடுத்து வருகிறார். அனைவரும் பாசிட்டிவ்வாக சொல்லும் படங்களையும் இவர் விமர்சித்து அந்த ஹீரோக்களின் ரசிகர்களிடம் மாட்டிக கொள்கிறார்.
இன்றைய தினம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தற்போது பாசிட்டிவ்வான கமெண்ட்களையே வாங்கி வருகிறது. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அத்தகைய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்ற விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மறைமுகமாக தாக்கியுள்ளார். அதிகாலை ஷோ, திரையிடப்பட்ட நிலையில், திரையரங்கில் அனைவரும் பெட்ஷீட் சகிதம் வந்து தூங்குவதாக அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டான் படத்தை அனைவரும் சிறப்பாக பேசிவரும் நிலையில், இவர் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு படம் வெளியாகும்போது, அதன் நிறைகளை கூறாமல், குறைகளை மட்டுமே பட்டியலிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது இத்தகைய புகைப்படத்தை வெளியிட்டு டான் படத்தை தாக்கியுள்ளது குறித்து அவரது ரசிகர்கள் ஆத்திரமடைந்து பதில் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
Be First to Comment