தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இன்று குறிச்சி சுந்தராபுரம் சந்திப்பில் உரையாற்றினார் அதில், ”மக்கள் கிராம சபையை கூட்டி அங்கு இருக்கின்ற பெண்களுக்கு தி.மு.கவை சேர்ந்தவர்கள் சொல்லி கொடுத்து கிராம சபையில் அவதூறு சொல்வது அதற்கு இவர் பதில் சொல்வது. அப்படி ஒரு காட்சி நாடகத்தை நடத்தி வருகிறார். இந்த தொகுதியிலே 307 கோடி மதிப்பிட்டீல் அண்ணாநகர், மலைநகர், மலுமிச்சம்பட்டி, வெள்ளலூர், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 47 கோடி மதிப்பீட்டில் பேரூர் செட்டிபாளையத்தில் புதிய தானியங்கி பதப்படுத்தும் பால் பண்ணையை செய்துள்ளோம். அம்மா மினி கிளிக்கினை பேரூர் செட்டிபாளையம், வெள்ளலூர், மலுமிச்சம்பட்டியில் அமைத்துள்ளோம். போத்தனூர் மற்றும் ஈச்சனாரியில் புதிய பாலம். பொள்ளாச்சி நான்கு வழி சாலை 500 கோடியில் பணி நடந்துள்ளது. இப்படி பல திட்டங்கள் இந்த தொகுதியில் நடந்துள்ளது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதனால் புதிய புதிய தொழில் துவங்கப்பட்டுள்ளது.

கல்வியிலே சிறக்கின்ற மாநிலம் தமிழ்நாடு ஆர்ம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி என துவங்கப்பட்டுள்ளது. கல்வி கற்கும் நிலை உயர்ந்துள்ளது. தடையில்லா மின்சாரம் மூலம் தொழிற்சாலைகள் பயன்படுகின்றன. மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது.
கொரோனா காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டபோது 8 மாத காலமாக விலையில்லா அரிசி, விலையில்லா பருப்பு, விலையில்லா எண்ணெய், விலையில்லா சர்க்கரை கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். அதேபோல பொங்கல் பரிசாக ஒவ்வொரு அரிசி அட்டைதார்களுக்கும் ரூ.2,500 பொங்கல் தொகுப்பாக கொடுக்கப்பட்டது (மக்கள் நன்றி என கோஷமிட்டனர்) இவ்வளவு திட்டத்தை செயல்படுத்திட்டு இருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் இந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 வழங்குவதை தடுப்பதற்காக தி.மு.கவைச் சேர்ந்த வக்கீல்கள் நீதிமன்றத்திற்கு போய் தடை ஆணை வாங்க முற்பட்டனர். அதையும் தகர்த்தெறிந்து திட்டத்தை நிறைவேற்றினோம்.
Be First to Comment