அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுயில் கோவையில் ஒரு தொகுதியில் பா.ஜ.க போட்டியிடுகிறது. கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.


அனைத்து தரப்பு மக்களிடமும் வானதி சீனிவாசனுக்கு நற்பெயர் இருக்கிறது. தொகுதிக்குள் இவர் பரப்புரைக்கு வரும் போது எளிய மக்கள்கூட ஆர்வமுடன் வந்து பேசுகின்றனர். இன்று ராம்நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். மேல்தட்டு மக்களும் அவரிடத்தில் பேசுவதும். வானதி சீனிவாசனுக்கு தெற்கு தொகுதி கைகொடுக்கும் என்ற பேச்சு நிலவி வருகிறது. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பெண் தொழில்முனைவோருடன் சந்திப்பதும், உழைக்கும் மகளிரோடு உரையாடுவது பெண்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. அதே போல் பூ தொடுத்து விற்கும் பெண் தொழில் முனைவோரோடு மதிய உணவு. எம்.ஜி.ஆர் ரசிகரின் இளநீர் கடையில் இளநீர் வாங்கி பருகுவது என வானதி கோவை தெற்கு தொகுதியில் பரப்புரை செய்வது அனைவராலும் பாராட்டுப்படுகிறது. சொந்த மண்ணின் மகள் என்பதால் இவர் மீது மக்கள் பாசத்துடன் பழகுகின்றனர். இவையெல்லாம் இவருக்கான வெற்றி வாய்ப்பு வலு சேர்க்குமா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.
Be First to Comment